Sunday, 1 May 2016

Government Jobs Today News



அரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு
 செய்ய மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி,

மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆட்களை தேர்வு செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்துவது குறி்த்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த முறையில், வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் எந்த அரசு அதிகாரிகளையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. அரசு பணிகள் காலியாக இருக்கும் விபரங்கள் ஒரு பொதுவான இணையதளத்தில் வெளியிடப்படும். ஆன்லைனிலேயே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் ஆதார் கார்டு உதவியுடன் எலக்ட்ரானிக் கையெழுத்தை (eSign) இணைத்து ஆவணங்களை அனுப்ப வேண்டும். சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியுள்ள டிஜிட்டல் லாக்கரில் பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை அரசு தேவைப்படும் போது சரிபார்த்துக் கொள்ளும்.

இவ்வாறு ஆன்லைன் முறையில் ஆட்களை தேர்வு செய்வதால் அரசு வேலைக்காக எந்த முக்கிய உயர் அதிகாரிகளையும் அணுக வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், வேலைக்கு சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களை அட்டெஸ்ட் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படாது.

மத்திய அரசின் மனிதவள பயிற்சித்துறை செயலாளர் சஞ்சய் கோத்தாரி மற்றும் வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்பட 12 பேர் கொண்ட குழு இந்த பரிந்துரையை ஏற்கனவே சென்ற ஜனவரி மாதமே அரசுக்கு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தற்போது மனிதவள அமைச்சகத்தில் உள்ள செயலாளர்கள் வாரந்தோறும் பரிந்துரைகளை மறுஆய்வு செய்து வருகிறார்கள். விரைவில் இந்த முறையை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் ஆராய்ந்து வருகிறார்கள்.

ஏற்கனவே, சென்ற ஜனவரி 1-ந்தேதி முதல் கெசட்டட் அதிகாரிகள் மூலம் அட்டெஸ்ட் பெற வேண்டும் என்ற முறையை மாற்றி நாமே சுயமாக அட்டெஸ்ட்டட் செய்து கொள்ளும் எளிய முறையை கொண்டு வந்தது மத்திய அரசு. மேலும், ஜூனியர் குரூப் பி, சி, டி பணிகளுக்கு நேர்முகத்தேர்வை ரத்து செய்திருந்ததும் நினைவு கூரத்தக்கது. 

Saturday, 30 April 2016

Librarian

Librarian

 

 

 

 

Librarian in Tamil Nadu Public Service Commission - India.

Number of Posting :- 1

Date of Notification :- 25.04.2016

Date of Closing :- 24.05.2016

Date of Exam :- 17.07.2016 FN & AN

APPLY ONLINE CLICK   

          NOTIFICATION DETAILS CLICK

 

 

 

VIT UniversityEntrance Result Published








விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், முதல் மூன்று இடங்களை ஆந்திரா, குஜராத், புது தில்லி மாநில மாணவர்கள் பெற்றனர். விஐடி பல்கலைக்கழக வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு (2016) பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வியாழக்கிழமை வெளியிட்டார். இதுதொடர்பாக, ஜி.விசுவநாதன் கூறியதாவது: நிகழாண்டு பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த 6 முதல் 17-ஆம் தேதி வரை இந்தியாவிலுள்ள 118 நகரங்களிலும், வெளிநாட்டில் துபை, குவைத், மஸ்கட் ஆகிய இடங்களிலும் கணினி முறையில் நடைபெற்றன. இதில் 2,12,238 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், ஆந்திர மாநிலம், ஸ்ரீ சைதன்யா ஜுனியர் கல்லூரி மாணவர் சேவாகுல வம்சி முதலிடத்தையும், குஜராத் மாநிலம் செயின்ட் ஆன்ஸ் பள்ளி மாணவர் மோஹில் பட்டேல் இரண்டாமிடத்தையும், புது தில்லி டிஏவி பப்ளிக் பள்ளி மாணவர் சத்யஜித் கோஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். நுழைவுத்தேர்வில் ரேங்க் அடிப்படையில் தகுதி பெற்ற மாணவ, மாணவியர் விஐடியில் சேருவதற்கான கலந்தாய்வு மே மாதம் 9-ஆம் தேதி முதல் விஐடி வேலூர், சென்னை வளாகங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இதன்படி, 1 முதல் 8 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 9-ஆம் தேதியும், 8,001 முதல் 12 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 10-ஆம் தேதியும், 12,001 முதல் 16,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 11-ஆம் தேதியும், 16,001 முதல் 20,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 12-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. விஐடியின் ஜி.வி. பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளில் முதலிடம் பெற்று விஐடியில் சேரும் மாணவ, மாணவியருக்கு பி.டெக். பட்டப்படிப்பின் 4 ஆண்டு காலமும் 100 சதவீத படிப்பு கட்டணச் சலுகையும், விஐடி நுழைவுத்தேர்வில் 10 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு படிப்புக் கட்டணத்தில் ரூ. 50 ஆயிரம் கட்டணச் சலுகையும், 10,001 முதல் 20,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது. விஐடி நுழைவுத் தேர்வு முடிவுகளை


 
www.entrance corner.com,  

ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றார் வேந்தர் ஜி.விசுவநாதன்.

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.



தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள்வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.
முன்கூட்டியே மாணவர் சேர்க்கை...:
பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு முதல் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.அதற்காக கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. அதுபோல நிகழாண்டும் மே 2-ஆம் தேதியே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி, சேர்க்கையையும் விரைவாக நடத்தி முடிக்க அரசு கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன.