Saturday, 9 June 2012

IIT Management against to single Entrance method

IIT Management against to single Entrance method of Kanpur

  ஒரேநாடு, ஒரே நுழைவுத் தேர்வு என்கிற மத்திய அரசின் திட்டத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கான்பூர் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
   அரசு மற்றும், அரசு உதவி பெரும் கல்லூரிகளில்  பொறியியல் கல்வி பயில நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு, திட்டத்தை அறிமுகப் படுத்த மத்திய அமைச்சர் கபில்சிபல் கடந்த மாதம் பரிந்துரைத்திருந்தார். இதில் ஐஐடி, என்ஐடி கல்விமுறையும் அடங்கும்.
    இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள கான்பூர் ஐஐடி நிர்வாகம், ஒரேநாடு, ஒரே நுழைவுத் தேர்வு என்கிற மத்திய அரசின் திட்டம் கல்விக் கொள்கைக்கு எதிரானது. இதை அமுல் படுத்தினால் பல்வேறு பிரச்சனைகளை நாங்கள் மாணவர்களிடமிருந்து சந்திக்க வேண்டியிருக்கும். எனவே எங்களுக்கு இந்த நுழைவுத் தேர்வுமுறை பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ளனர்.
210 பேர்கொண்ட நிர்வாகக் குழுவில் ஆலோசித்து முடிவெடுத்தபின் தங்களது செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
    மேலும் 2013 ம ஆண்டிலும் வழக்கம்போல  ஐஐடி க்கு தனி நுழைவுத் தேர்வுதான் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். கான்பூர் ஐஐடி நிர்வாகத்தை தொடர்ந்து டெல்லி, சென்னை ஐஐடி நிர்வாகமும் தனி நுழைவுத் தேர்வையே பின்பற்றப் போவதாக அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

No comments: