Sunday, 10 June 2012

China is ready to send men to the end of this month to explain

China is ready to send men to the end of this month to explain :


ஒரு ஆளுள்ள விண்கலத்தை இம்மாத இறுதிக்குள் சீனா விண்ணில் செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் முதல் விண்ணில் இயங்கி வரும் ஒரு விண் நிலையத்துடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு இவ்வாறு மனிதரை கொண்டு செல்லும் விண்கலத்தை செலுத்தவுள்ளது. இதற்கெனெ விண்வெளிக்கு ஏவும் ஏவுதளத்துக்கு ஷென்ஷோவு-9 எனப் பெயரிடப்பட்ட குறித்த விண்கலம் கொண்டு வரப்பட்டது. ஜுன் மாதம் நடுப்பகுதியில் விண்ணுக்கு செலுத்தலாம் என்ற எதிர்பார்ப்புடன் தற்போது சோதனைகளை சீனா  மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிரது.

ஒரு விண்வெளி வீரரின் முயற்சியுடன் விண்ணிலுள்ள ஸ்பேஸ் லேப் ஐ விண்கலத்தில் இணைக்கும் -Manul docking- எனும் செயற்திட்டத்தை மேற்கொள்வதே இச்சோதனையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இச்செயற்திட்டத்தை மேற்கொள்வது அரிதான நிகழ்வாகும். அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் என்பனவே இதற்கு முன் இப்பணியை வெற்றிகரமாகச் செயற்படுத்தியிருந்தன.

தற்போது சீனாவின் இந்த செயற்திட்டம் நிறைவேறினால் இச் செயற்திட்ட தர வரிசைப் படுத்தலில் 3 ஆவது இடத்தைப் பிடிக்கும். மிகச் சுதந்திரமாக விண்ணாய்வு மேற்கொள்ளும் வசதிப்படி சீனாவின் இந்த அர்ப்பணிப்பு மிக்க செயற்திட்டங்கள் அதனை நம்பர் 1 இடத்துக்கு கொண்டு செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: