Sunday, 10 June 2012

Euro 2012: Portugal beat jermani


Euro 2012: Portugal beat jermani


யூரோ உலக கோப்பை காற்பந்து தொடருக்காக, இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இரு பரபரப்பான ஆட்டங்களில், ஜேர்மனி, டென்மார்க் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
முதலில் நடந்த ஆட்டத்தில் பலம்வாய்ந்த நெதர்லாந்து அணி, டென்மார் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. போட்டியின் 24 வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் Krohn-Dehli சாதுரியமாக ஒரு கோல் அடித்தார். அதன் பின் நெதர்லாந்து கடும் முயற்சி மேற்கொண்டும், ஆட்டம் முடிவடையும் வரை ஒரு கோலையும் போடமுடியவில்லை. இதனால் 1-0 என டென்மார்க் அணி வெற்றி பெற்றது.

 1992 யூரோ போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை இதே போன்று டென்மார்க் அணி வீழ்த்தியிருந்தது. இப்போட்டியால், எமக்கு கிடைக்க வேண்டிய பெறுமதியான மூன்று புள்ளிகளை இழந்துவிட்டதாக நெதர்லாந்து கேப்டன் மார்க் வான் பொமெல் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இன்று மாலை நடைபெற்ற மற்றைய போட்டியில் ஜேர்மனி - போர்த்துக்கள் என இரு பலம்வாய்ந்த அணிகளும் தமக்குள் கடுமையாக மோதிக்கொண்டன.

போட்டியின் முதல் பாதி நேரம் முடிவடையும் வரை இரு அணிகளில் எந்த கோலும் போடவில்லை. எனினும் போட்டியின் 73 வது நிமிடத்தில் ஜேர்மனியின் மரியோ கோமெஸ் அடித்த கோல் மூலம் ஜேர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. போர்த்துக்கல் அடித்த ஷாட்கள் பல சந்தர்ப்பத்தில் மயிரிழையில் கோல் வாய்ப்பிலிருந்து விலகின.

இறுதியில் ஜேர்மனி வெற்றிபெற்றது. மூன்று முறை யூரோ கோப்பை சாம்பியனான ஜேர்மனி, இம்முறை உலக கோப்பை தொடக்கத்தையும் வெற்றியுடன் ஆரம்பித்திருக்கிறது.

உலகின் முன்னணி காற்பந்து வீரர்களில் ஒருவரான கிரிஸ்டியானோ ரொனால்டோவின் தலைமைத்துவத்தில் இம்முறை களமிறங்கிய போர்த்துக்கல் அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

No comments: