Dengue fever spreads rapidly in Bihar

டெங்கு காய்ச்சல் , தமிழ் நாட்டைத் தொடர்ந்து, பீகாரிலும் வேகமாகப் பரவிவரத்தொடங்கியுள்ளன. பீகாரின் மிஷாகப்பூரில், டெங்கு காய்ச்சல் தாக்கி 15 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருவதால், பீகார் மக்கள் பீதியில் உள்ளனர். எனினும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், சரியான முறயில் சிகிச்சை அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்யத் தொடங்கிவிட்டது என்றும் பீகார் அரசு கூறியிருக்கிறது.
மேலும், சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என்றும், மருத்துவ மனைகளில் சிறப்பு சிகிச்சைக்கான வார்டுகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன எனவும் கூறியுள்ளது. சென்ற ஆண்டு, பீகாரின் கயா மிசாக் கட்டிக்கில் டெங்கு காய்ச்சலுக்கு 100 குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதேவெளை, டெங்கு காய்ச்சலுக்கு மதுரியில் மேலும் ஒரு சிறுமி பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது. இதையடுத்து தமிழகத்தின் தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் 110 பேர் சிகிச்சை பெற்று வௌர்கின்றனர். கோவையில் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment